குழந்தைகள் தின விழா அறிக்கை
நமது டெல்டா பப்ளிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா 12 /11 /2020 வியாழனன்று காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.
மாணவர்கள் Zoom App மூலம் நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.
குழந்தைகள் தின விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது. திருமதி. ஷாலினி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, ஆசிரியை செல்வி. R.கலைமதி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, பள்ளி முதல்வர் திருமதி.L. ஜோஸ்பின் அவர்கள் மாணவர்களுக்கு குழந்தைகள் தின வாழ்த்துரை வழங்கினார்கள்.
கலை நிகழ்ச்சியின் தொடக்கமாக தமிழாசிரியர் திரு. ரகுராமன் அவர்கள் குழந்தைகள் தின வாழ்த்து கவிதையை வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர் குழந்தைகள் தின வாழ்த்து பாடலைப் பாடினார். ஆங்கில ஆசிரியர் திரு. அருண்தேவன் அவர்கள் பல குரலில் குழந்தைகள் தின வாழ்த்தினை கூறி மாணவர்களை களிப்புற செய்தார்.
பள்ளி துணை முதல்வர் திரு. சுருளிநாதன் அவர்கள், குழந்தைகள் தின வாழ்த்துச் செய்தியை வழங்கி மாணவர்களை மேலும் உற்சாகப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அனைத்து ஆசிரியர்களின் ஒளி -ஒலிப்பதிவு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சிகளான ஆடல், பாடல், கவிதை வாசித்தல், நாடகம் ஆகியவை ஒளிபரப்பு செய்யப்பட்டு அதன் மூலமாக மாணவர்களுக்கு குழந்தைகள் தின வாழ்த்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவாக தமிழாசிரியை திருமதி.ம.வைஷ்ணவி நன்றி கூற, நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
நன்றி !!! வணக்கம்.